Friday 3rd of May 2024 06:16:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிண்ணியாவில் கொரோனா; அரச ஊடகத்தில் பொய்யான செய்தி எனக் குற்றச்சாட்டு!

கிண்ணியாவில் கொரோனா; அரச ஊடகத்தில் பொய்யான செய்தி எனக் குற்றச்சாட்டு!


அரச பத்திரிகையான தினகரன் பத்திரிகையில் வெளியாகிய கிண்ணியாவில் 60 பேருக்கு கொரோனா தொற்று எனும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என கிண்ணியா பொது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜித் தெரிவித்தார்

கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்

இன்று (24)சனிக்கிழமை தினகரன் பத்திரிகையில் கிண்ணியாவில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி பொய்யானது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தார்

எந்ததொரு பத்திரிகைக்கோ , எந்ததொரு ஊடகங்களுக்கோ செய்தி அவ்வாறு வழங்க வில்லை அது முற்றிலும் தவறான செய்தி என தெரிவித்தார்

கிண்ணியா பிரதேசத்தில் இன்று வரைக்கும் எந்த ஒரு கொரோனா நோயாளர் பதிவாகவில்லை என்பதை இந்த நாட்டு மக்களுக்கு பொறுப்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்

எமது பிரதேசத்திலிருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்திருந்தால் அவர்களை PCR பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் வேறு எந்த தகவலும் வழங்கவில்லை என தெரிவித்தார்

இதுதொடர்பாக உரிய பத்திரிக்கை ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில் தான் இந்த செய்தியை வழங்கவில்லை என தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பாக உரிய ஊடக நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE